தோட்டப்பயிர்சாகுபடி செய்முறை பயிற்சி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டி கிராமத்தில் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலைய தோட்டக்கலைத்துறை 4ஆம் ஆண்டு மாணவர்கள் கிராமதங்கல் திட்டத்தின் கீழ் தோட்டப்பயிர் சாகுபடி பற்றிய செய்முறை பற்றிய செய்முறை பயிற்சி பெற்றனர். விராலிப்பட்டி விவசாயி கலைவாணன் என்பர் தோட்டத்தில் சாகுபடி செய்துள்ள பசுமைக்குடிலில் வாழை, வெள்ளரி , தக்காளி, கத்தரிக்காய் ஆகிய பயிற்சிகள் சாகுபடி தொழில்நுட்ப முறைகள் பற்றி விளக்கம் கேட்டு பணி அனுபவம் பெற்றனர். இந்த முகாமில் தோட்டக் கலைத்துறை மாணவர்கள் ஆகாஸ் முத்து நம்பி , பால லிங்கேஷ்வரன், ராஜ்கமல், வெற்றிவேல், ஸ்ரீராம், சக்தி ஆகியோர் புதியதொழில்நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடு எடுத்துரைத்தனர்.