தமிழ்நாடு விதைச்சங்க மட்டம் வாடிப்பட்டி பிரிமியர் விதைகள் உரிமையாளர் பாபு சரவணன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் துரை விதைச்சான்று ைற யி ன் துணை விதை ஆய்வு இயக்குநர், விதைச்சான்று உதவி இயக்குநர் மற்றும் விதைப்பரிசோதனை அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு விதை தொழில்நுட்பங்கள் பற்றி விளக்கினர். இந்தகூட்டத்தில் நடந்த புதிய நிர்வாகிகள் தேர்வில் தலைவராக ராசி ராமசாமி, செயலாளராக காளிதாஸ், பொருளாளராக கதிர் ராமசாமி , துணைத்தலைவர்களாக பாஸ்கர், பழனிச்சாமி, பாபு சரவணன் , துணைச்செயலாளர்களாக ஜெயக்குமார், சஞ்சீவிகுமார், தரணீதரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர். இந்த கூட்டத்தில் கடந்த ஆண்டில் ஒரு லட்சம் மெட்ரிக்டன் சான்றுவிதை உற்பத்தி செய்து சாதனை படைத்த விதைச்சான்று துறைக்கு பாராட்டு தெரிவித்தும், விதைச்சான்று பணியில் பயன்படுத்தப்படும் பொருள்களுக்கு சி.எஸ்.டி வரியிலிருந்துவிலக்கு அளித்த தமிழக மீன்வளத்துறை அமைச் சருக்கு நன்றி தெரிவித்தும் , நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையினை சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் கூடுதல் விலையினை நிர்ணயித்திட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையினை கூடுதல்விலையினை நிர்ணயித்திடவேண்டும்