லண்டனுக்குச் செல்லும் ஓலா டாக்ஸிகள்

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு டாக்ஸி போக்குவரத்து சேவைகளை வழங்கிவரும் நிறுவனம்தான் ஓலா.


இந்நிறுவனம் இந்தியா மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் தனது சேவையை விரிவாக்கம் செய்துள்ளது.


இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள கார்டிஃப் நகரில் தனது சேவையைத் தொடங்கிய ஓலா, பின்னர் நியூபோர்ட், பிர்மிங்கம், லிவர்பூல், எக்ஸெட்டர், ரீடிங், பிடிஸ்டால், பாத், காவெண்ட்ரி, வார்விக் ஆகிய இடங்களிலும் தனது சேவையை விரிவாக்கம் செய்தது.

 

இந்நிலையில் விரைவில் லண்டன் நகரிலும் டாக்ஸிகளை இயக்கபோவதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே லண்டன் டிரான்ஸ்போர்ட் அமைப்பிடமிருந்து டாக்ஸிகளை இயக்குவதற்கான உரிமத்தை ஓலா நிறுவனம் பெற்றது.

 

தற்போது டாக்ஸி ஓட்டுநர்களுக்கான தேர்வுப் பணியில் ஓலா ஈடுபட்டுள்ளது. லண்டன் நகரில் மட்டும் 50,000 ஓட்டுநர்கள் சேவையில் இணைக்கப்படுவார்கள் என்று ஓலா நிறுவனம் கூறுகிறது.