Maharashtra floor test: நிச்சயம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறுவோம்: சோனியா உறுதி
Maharashtra floor test: நிச்சயம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

Maharashtra floor test: நிச்சயம் நம்பிக்க வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் உத்தரவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரவேற்றுள்ளார். மேலும், நிச்சயம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என்று அவர் உறுதி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் எதிர்பாராத அரசியல் திருப்பமாக ஆட்சியமைத்த பாஜகவுக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என்றும் ரகசிய வாக்கெடுப்பு முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்கு இடைக்கால சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் மூத்த உறுப்பினராக உள்ள எம்எல்ஏவை சபாநாயகராக தேர்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.