New Delhi:
குடியுரிமை திருத்த மசோதா, 'வடகிழக்கு இந்தியா மீது நடத்தப்படும் கிரிமினல் தாக்குதல்' என்றும் 'வடகிழக்கை இன ரீதியாக வடிகட்டவே' இந்த மசோதா பயன்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி. நேற்று முன் தினம் மசோதாவுக்கு லோக்சபாவில் ஒப்புதல் கிடைத்த நிலையில், இன்று ராஜ்யசபாவில் தாக்கல் ஆகிறது.
“மோடி - ஷா அரசு கொண்டு வரும் இந்த குடியுரிமை திருத்த மசோதா வடகிழுக்கு இந்தியாவை இன ரீதியாக சுத்தப்படுத்தும் முயற்சியே. வடகிழக்கு மீதும் அவர்களின் வாழ்க்கை மற்றும் இந்தியாவை அவர்கள் பார்க்கும் விதத்தின் மீதும் நடத்தப்படும் கிரிமினல் தாக்குல் இது. நான் வடகிழக்கு மக்களுடன் துணை நிற்கிறேன். அவர்களுக்காக சேவையாற்ற கடமைப்பட்டிருக்கிறேன்,” என்று ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார் ராகுல்.