சென்னை: 'தனிமைப்படுத்துதல் முயற்சி வெற்றி பெற, அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும், 5,000 ரூபாய் நிதியுதவியை அரசு வழங்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: பொதுமக்களுக்கு முக கவசங்கள் வழங்க, மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கு, கலெக்டர்களுடன், தி.மு.க., - எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசித்து, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, தேவையான நிதியை ஒதுக்க வேண்டும். வங்கிகளில் வாங்கியிருக்கும் வாகன கடன்களுக்கான மாதாந்திர தவணை தொகை வசூலை, வங்கிகள் மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்.
குடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும்: ஸ்டாலின்